logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை !!!

தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களுக்கு உடனடி நடவடிக்கை தேவை!

தேனி நகரின் முக்கிய சாலைகள், பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவது நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக , சாலையை கடந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சாலைகளின் இருபுறங்களிலும் முறையற்ற வகையில் நிறுத்தப்படும் கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகள் நிகழும் அபாயமும் அதிகரித்துள்ளது. ஆகவே

பொதுமக்களின் நலன் கருதி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்றுவதற்கும், விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்துபவர்கள்மீதும், சாலை ஓரங்களில் ஒலி எழுப்பும் கருவிகளை வைத்து போக்குவரத்து விதிகளை மீறி ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்தி ( வாகனத்தில் வியாபாரம் செய்வது ஒரே இடத்தில் நின்று வியாபாரம் செய்வது அல்ல ) வாகனத்தில் வியாபாரம் செய்வதற்கு முறையாக மாவட்ட போக்குவரத்து ஆய்வாளரிடம் அனுமதி பெறப்பட்டதா ? அந்த மாதிரி அனுமதி பெறாமல் விற்பனை செய்யும் வாகனத்தில் வியாபாரம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் மாவட்ட காவல்துறையும், போக்குவரத்து காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பும், பொதுமக்களின் நலனும் முதன்மையாக கருதப்பட்டு, தேனி நகரில் போக்குவரத்து ஒழுங்கை நிலைநிறுத்த மாவட்ட காவல்துறை விரைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர், இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பார்களா ? மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறையும்....... பொறுத்திருந்து பார்ப்போம்................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

4
826 views

Comment