தமிழ்நாடு - கிரிப்டோ பிசினஸ் என்ற பெயரில் நூதனமான முறையில் மெகா மோசடி செய்து வரும் பல்வேறு நிறுவனங்கள்! புலனாய்வுத்துறை என்ன செய்கிறது???
தமிழ்நாடு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பெரிய, பெரிய ஹோட்டல்களிலும் ரிசார்ட்களிலும் வியாபார கருத்தரங்கு என்ற பெயரில் பல அப்பாவி மக்களை அந்த நிறுவனத்தின் ஏஜென்ட்களின் மூலம் நன்கு மூளைச்சலவை செய்து அவர்களை பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்கள் இலக்கு வந்தவுடன் வெவ்வேறு விதமான பெயர்களில் நிறுவனங்களின் பெயர்களை மாற்றி, பல கோடிகளை வசூல் செய்து ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் அழைத்து வந்த நபரிடம் கேட்டால் நான் என்ன செய்ய, எனது பணமே லட்சக்கணக்கில் போய் விட்டது நான் என்ன செய்ய என்று சாக்கு போக்கு சொல்லி ஏமாற்றி வருகின்றனர்! இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வு ஏதும் இல்லையா? இது போன்ற டுபாக்கூர் நிறுவனங்கள் ஏராளம்! அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தேனி, நாகர்கோவிலில், விருதுநகர், மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இந்த டுபாக்கூர் நிறுவன ஏஜென்ட் கள் ஹாயாக வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்...இவர்களை இனம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! இந்த விஷயத்தில் அரசும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி இவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.....................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி