
தமிழ்நாடு - தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையம் சார்பில் கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 வது பிறந்த நாள் கொண்டாட்டம்!!!
தேனி மாவட்டம், தேனியில் 15/07/2025 இன்று மெய்வழி மக்கள் இயக்கம் - மெய்வழி சட்ட மைய நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி , .................
தேனி மாவட்டத்தின் சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களின் 123 வது பிறந்த நாளினை முன்னிட்டு , தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருக்கும் காமராஜர் ஐயாவின் முழு திரு உருவ சிலைக்கு மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்கள் தலைமையில் , மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ் , அவைத் தலைவர் முத்து , இளைஞர் அணி தலைவர் ஈஸ்வரன், நகரச் செயலாளர் அருள் பாண்டி, நகர துணை செயலாளர் பிரகாஷ் , இணைச் செயலாளர் சிவசுப்பிரமணியன், மகளிர் அணி துணைத் தலைவர் அமுதா, துணைச் செயலாளர் கஸ்தூரி மற்றும் காவிய லட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சி......................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி