logo

தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில், தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் தட்டில் வெத்திலை பாக்கு வைத்து மாவட்ட ஆட்சியரை அழைத்து, தேனி நகரின் அசுத்த சூழ்நிலையை நேரில் பார்வையிட வேண்டுகோள் !!!

தேனி மாவட்டம், தேனியில் - தட்டில் வெத்திலை பாக்கு வைத்து மாவட்ட ஆட்சியரை அழைத்து, தேனி நகரின் அசுத்த சூழ்நிலையை நேரில் பார்வையிடஇந்து எழுச்சி முன்னணி சார்பில் வேண்டுகோள் !

தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட முப்பத்தைந்து வார்டுகளிலும் சுகாதாரக் கோளாறுகள் தீவிரமாக அதிகரித்து வருகின்றன. நகரின் பல பகுதிகளில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன; சாக்கடைகள் நிரம்பி வழிந்துவருகின்றன. தெருப்பாதைகள் குண்டும் குழியுமாகி, பொதுமக்கள் மிகுந்த அவதியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், வாய்மொழியாகவும் புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சிக்கு தேவையான அனைத்து வரிகளும் மக்கள் நேர்மையாக செலுத்தி வருகின்றனர். இருப்பினும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால், பொதுமக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகின்றனர் !
இந்த சூழ்நிலையில், மக்கள் நிலையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில், இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பில் நாளை 01.07.2025 அன்று காலை 11.30 மணிக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஒரு தட்டில் வெத்திலை மற்றும் பாக்கு வைத்து, தமிழரின் மரபின்படி மரியாதை மற்றும் பணிவின் அடையாளமாக மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக அழைப்பு வழங்கப்படும்.
நிகழ்ச்சி, அரசு ஐ.டி.ஐ., கருவேல் நாயக்கன்பட்டியில் இருந்து ஊர்வலமாக தொடங்கி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் செல்லும். மக்கள் நலனுக்காக நடைபெறும் இந்த நிகழ்வின் மூலம், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்பப்படுகிறது.
நிகழ்ச்சித் தலைவர்:
திரு மாய. லோகநாதன் ஜீ,
மாவட்ட பொதுச் செயலாளர், இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்:
திரு இராமமூர்த்தி,
மாவட்ட செயலாளர், இந்து எழுச்சி முன்னணி – தேனி மாவட்டம்
இந்த நிகழ்வு, அரசியல் நோக்கமற்ற , சமூக நலன் சார்ந்த செயல் ஆகும். இது, தேனி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார பாதுகாப்புக்காக நடத்தப்படுகிறது என்று
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி தெரிவிக்கிறது! இவ்வாறு செய்தால் கூட சம்பந்தப்பட்ட துறைகள் இந்த பிரச்சினை கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பார்களா ???........................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவுதுணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

105
956 views