logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம், தேனியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட மெய்வழி மக்கள் இயக்கம் மற்றும் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் கோரிக்கை மனு !!!

தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம், மற்றும் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் தேனிமாவட்ட ஆட்சித் தலைவரிடம் விதிமுறைகளை மீறி இயங்கி வரும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மெய்வழி மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் ஆலோசனையின் படி, தேனி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செல்வலட்சுமி அவர்களின் தலைமையில், தேனி மாவட்டத்தைச் சார்ந்த போடி ஆண்டிபட்டி பெரியகுளம் சின்னமனூர் அதனைச் சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் இயங்கி வரும் கல்குவாரிகள் , கிரசர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா ? என்பதை நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மேலும் இதனால் இயற்கை விவசாய வளங்கள் அழிந்து ஒழிந்து விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுவதால் , விவசாயிகளின் நலன் கருதியும் , மாவட்ட செயலாளர் தினேஷ் ஒருங்கிணைப்பில் , மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது ... அப்பொழுது உடன் நகரச் செயலாளர் அருள் பாண்டி ,மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயலீலா , துணைத் தலைவி அமுதா, செயலாளர் விஜயா , காவியா மற்றும் ரவி ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்த நிகழ்ச்சி............................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

37
625 views