logo

தமிழ்நாடு, தேனி மாவட்டம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் ஆலோசனை கூட்டம் !!!

தேனி மாவட்டம், தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு! ஆம் ஆத்மி கோரிக்கை! தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங் அவர்கள் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.என்.ஆர்.சிவாஜி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா வகையான தேர்தல்களிலும் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும், வாக்கு சீட்டில் முத்திரை பதித்து வாக்களிக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும் என்றும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மட்டுமே தொகுதி வரையறை செய்து பாராளுமன்ற தொகுதிகளைக் குறைக்க கூடாது ஏனெனில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தினை செம்மையாக செயல் படுத்தி பாராட்டுகளைப் பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனவே தொகுதிகளை அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும், மேலும் மக்கள் நலனுக்காகவும் நிர்வாக வசதிக்காகவும் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கியதாகக் கொண்டு தேனி பாராளுமன்றம் இருக்கவேண்டும் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சாசனப்படி ஜனநாயகம் காக்கப்படவேண்டும். பணம், பரிசுகள் போன்றவைகளை கொடுத்து வாக்கு கேட்கும் வேட்பாளர்கள் மீது தாமதமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சிவாஜி கேட்டுக் கொண்ட நிகழ்வு.....................................................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

58
2239 views