logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தலைதூக்கும் கந்துவட்டி எனும் நஞ்சு ??? கந்துவட்டி கொடுமையால் பல உயிர்களை காவு கொடுத்தும், மெட்ரோ ட்ரெயின் போல வேகம் எடுக்கும் கந்துவட்டி, வங்கிகள் கடன் அட்டை வசூல் செய்யும் கும்பல்கள்.. செய்கின்ற அராஜகம்???இவற்றை தடுக்க காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர்???

தேனி மாவட்டம், கூடலூர், கம்பம் நகரங்கள் குறிப்பாக ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் கலங்கடித்து தலைதூக்கும் கந்துவட்டி எனும் நஞ்சு அதை நசுக்குவது யார்..?
கந்துவட்டி கொடுமையால் பல உயிர்களை காவு கொடுத்தும், மெட்ரோ ட்ரெயின் போல வேகம் எடுக்கும் கந்துவட்டி கும்பல்கள்..?
அறிந்தும், தெரிந்தே, கள்ள மவுனம் சாதித்து வரும் கண்காணிக்கும் துறைகள்..?
தேனி மாவட்டத்தில் சமீபகாலமாக புற்றீசல்களைப் போல வளர்ந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் தாக்கத்தால் கந்துவட்டி கும்பல்கள் பெருகி வரும் அபாயம் !!!?
இந்த பிரச்சினையை மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு சமூக நலப் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் வேண்டுகோள் !!!
தமிழ்நாட்டில் கந்துவட்டி பிரச்னை பயங்கர விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில், அரசின் கடும் நடவடிக்கைகளால், அது குறைந்து வருவதாக எதிர்பார்க்கப்பட்டது !
இந்நிலையில், கம்பம் மற்றும் கூடலூர் நகரங்கள் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மறுபடியும் தலைதூக்கும் கந்துவட்டி கும்பல்களால் சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது !
உதாரணத்திற்கு இதே பகுதியில் கடந்த 06 மாதங்களுக்கு முன்பு டீ மாஸ்டர் ஒருவரின் மனைவி கந்துவட்டி கொடுமையால் தகாத நாகூசும் வார்த்தைகளை கேட்டு முடங்கி தனது குழந்தைகளை பரிதவிக்க விட்டு தூக்கில் தொங்கினார் என்பது மாவட்ட காவல்துறை கவனத்தில் கொள்ளத்தக்கது !
கம்பம், கூடலூர் நகரங்கள் நகரை ஒட்டிய சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கந்துவட்டி, வார வட்டி, நாள் வட்டி, மீட்டர் வட்டி, மணி வட்டி, மெட்ரோ ட்ரெயின் வட்டி என பல பெயர்களில் கந்துவட்டி கும்பல்கள் மூலம் சாமானிய மக்களை குறிவைத்து வட்டி தொழிலை மெருகேற்றி வருவதாக சமூக நலன் விரும்பிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர் ! ?
இதில் என்ன கொடுமை என்றால், இந்த கந்துவட்டி கும்பல்களின் ஒரு சிலர் கந்து வட்டிக்கு பெற்றோர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட இயலாததால் அவர்களது குழந்தைகளை வீட்டு வேலை செய்ய சொல்லி வற்புறுத்தி, வலுக்கட்டாயமாக அழைத்து செல்கிறார்களாம் !
இது ஒரு புறம் இருந்தாலும் ஏதாவது ஒன்றென்றால் காவல் நிலையத்தை தான் நாட வேண்டும் ஆனால் காவல் நிலையத்தில் இருப்பவர்களே இந்த கும்பலுக்கு துணை போவதோடு, காவல்துறையினரும் அவர்கள் பங்கிற்கு பரவலாக வட்டிக்கு கொடுத்திருக்கிறார்களாம்? இப்படி இருக்க பாதிக்கப்பட்டவர்கள் எப்படி காவல் நிலையம் செல்வர், என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் வலுவாய் வேலியே பயிர்களை மேய்வது என தொடங்கியுள்ளது !
மேலும், அரசு ஊழியர்கள் , காவல் நிலையங்களில் பணிபுரிபவர்களும், சில கும்பலை வைத்து பரவலாக கந்து வட்டிக்கு கொடுத்து வசூல் செய்வது வருவதாகவும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாய் பேசப்பட்டு வருகிறது !
கந்து வட்டி .......இது கூட ஓரளவு தொந்தரவு இல்லாத கண்ணியமான வட்டியாம்..!
வார வட்டி என்பது வார வட்டிக்கு விடுபவரிடம் ஒரு 10,000 ரூபாய் வாங்கினால் என்றால் வாராவாரம் வட்டி மட்டும் 1000 ரூபாய். ....ஒரு வாரம் கட்ட இயலவில்லை என்றால் அந்த கட்ட வேண்டிய 1000 ரூபாய் அசலில் சேர்த்துக் கொள்வர் ???
குறிப்பாக, வேலைக்கு சென்றால்தான் ஒருவேளை உணவு என்றிருக்கும் வாழ்க்கை எனும் நரக சக்கரத்தை ஓட்டவே கஷ்டப்படும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள அப்பாவி குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு வழிய சென்று வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டி பணத்தை வசூல் செய்தும் பணம் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை பறிமுதல் செய்தும், இன்னும் ஒருபடி மேலே சென்று தேவைப்பட்டால் வீட்டையே பறிமுதல் செய்யும் வேலைகளும் இந்த கந்து வட்டி கும்பல்கள் மூலம் பெருகி வருகிறது !
உதாரணத்திற்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன் கம்பத்தை சேர்ந்த சில நபர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்க்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்து அந்த பணத்தை பெற அவர்கள் வீட்டில் அத்துமீறி பணம் வாங்கிய நபரை சண்டையிட்டு, வீட்டில் இருந்த நபர்களை வயதான பெண் உட்பட அனைவரையும் வெளியேற்றி வீட்டையும் பூட்டு போட்டு சாவியை எடுத்து சென்று விட்டனர்....காவல்துறைக்கு SOS மூலம் புகார் செய்ய, இந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் வந்தது ம், காவல்துறை விசாரணை செய்து உறவினர்களுக்குள் சுமூகமாக முடித்து கொள்ள அறிவுரை வழங்கி சென்ற பிறகு தான் வீடு பூட்டி திறவுகோலை கொண்டு சென்றனர்......போதாத குறைக்கு அடுத்த நாள் அவர் அந்த வீட்டின் பத்திரத்தை கொண்டு வா நான் உடனே பணம் பெற்றுத் தருகிறேன் என்று இந்த காவலர் முன்பாக வே கூறி விட்டு மறுநாள் அந்த வீட்டின் ஒரிஜினல் பத்திரத்தையும் இந்த நபருக்கு போக்கு காட்டிவிட்டு பத்திரத்தையும் கம்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்கள்..........இவற்றிற்கு தீர்வு என்ன என்று காவல்துறையும்.....சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!!! மேலும் செய்முறை போன்ற விசேஷத் தேவைகளுக்கும் ,குடும்ப தேவைக்கும் அவசரமாக 1000 ரூபாய் இந்த கந்த வட்டி கும்பலிடம் வாங்கினால், 1000 ரூபாய் அசலுக்கு வார வட்டி என 400 ரூபாய் நிர்ணயம் செய்வார்களாம். அசலாக அவர்கள் பெற்ற 1000 ரூபாயை திருப்பிக் கொடுக்கும் வரை இந்த 400 வட்டி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமாம். இதே பாணியில் 05 ஆண்டுகள் கடந்தாலும் கூட 1000 ரூபாய் அசல் குறையாதாம் !
மேற்கண்ட பகுதிகளில் பெருகிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் கடனுக்கு அடிமையாய் ஆண்களை விட அதிகம் பெண்கள் தான் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவ்வாறான சூழலில், இப்பகுதிகளில் பெண்கள் தான் கந்து வட்டி தொழிலில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனராம். இதில் அரசு ஊழியர்களின் மனைவிமார்களும் சங்கமம்.
இப்பகுதிகளில் மாத வட்டியில் ஆரம்பித்து வட்டியின் கொடுமையானது தற்போது வார வட்டி, நாள் வட்டி என்ற அரக்க நிலைக்கு வந்து நிற்பதாக அப்பகுதி மக்கள் பரவலாய் பேசி வருகின்றனர்.
வட்டி கொடுமையால் பல உயிர்களை காவு கொடுத்தும், நாளுக்கு நாள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பெருகி வரும் அவலம் நீடித்து வருவது என்பது பெரும் வேதனை ?
இந்த வேதனைக்கு காரணம் என்னவென்றால் வட்டிக்கு கொடுப்பவர்கள் காவல்துறையில் ஆரம்பித்து அரசு அதிகாரிகள் முதல் பினாமி தொழிலாக கந்துவட்டி தொழிலை நடத்தி வருகிறார்கள் என்பதுதான் இந்த வேதனையிலும் பெரும் சோதனை ???
ஒரு வேளை சாப்பாட்டுக்காக கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்களை குறிவைத்து காவல்துறையினரே கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வரும் அவலம் தொடர்வது என்பது அது நம் தேனி மாவட்டத்திற்கு மட்டுமே இந்தப் பெருமை சேரும் !
அதுசமயம், நமது தேனி மாவட்டத்து மதிப்பிற்குரிய, ஆட்சியர் மரியாதைக்குரிய, காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் தேனி மாவட்டம், கம்பம்,கூடலூர் நகரங்கள் மற்றும் ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் சாமானியர்களை தற்கொலைக்கு தூண்டும் பல மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் உச்சபட்ச நச்சரிப்புடன் கந்துவட்டி கொடுமையில் சிக்கி தவித்து வருபவர்களை அதிலிருந்து மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு பெருகி வரும் கந்துவட்டி மற்றும் வங்கிகள் கடன் அட்டை வசூல் செய்யும் கும்பல்களை அடக்கி ஒடுக்கி கட்டுப்பாட்டில் வைத்திருக்க தீவிர முனைப்பு காட்ட வேண்டும் என தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர் கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுத்து வருகின்றோம் !
வாழுங்கள்,வாழ விடுங்கள் ! நன்கு வாழ்வீர்கள் !வாழவிடுவீர்களா??? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..........................................................................,..........ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி


84
3709 views