logo

தமிழ்நாடு, தேனி மாவட்டம் தேனியில் உள்ள பெரியகுளம் சாலையின் முக்கிய பகுதியான அஜந்தா லாட்ஜின் பின்புற பழைய பாப்பு ராஜா தெருவின் அவலநிலை!!! இது பற்றி வெளியிட்டும் மெத்தனமாகவே இருந்து வருவது ஏன் ???

தேனி மாவட்டம் தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள அஜந்தா லாட்ஜின் பின்புற பகுதி பழைய பாப்பு ராஜா தெருவில் உள்ள கழிவுநீர் சாக்கடை மிகவும் கேவலமான முறையில் உள்ளது. இந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகியும் பெயரளவிற்கு ஏனோ தானோ என்று சுத்தம் செய்யப்பட்டு விட்டு விடுவார்கள்! இந்த அடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகியும் கவுன்சிலர் வந்து பார்ப்பதே இல்லை ? பிறகு எதற்கு கவுன்சிலர் என்று இந்த பகுதியிலுள்ள பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்! இந்த பகுதியில் உள்ள வார்டு கவுன்சிலர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை ... நகராட்சி நிர்வாகமும் என்ன செய்கின்றது. இந்த நிலை நீடித்தால் இந்த பகுதியில் இலவசமாகவே நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.... இதற்கு முன்பாக வருமுன் காப்போம்! என்ற வரிகளை மனதில் கொண்டு போர்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..... இந்த மழைக்காலத்தில் ஆங்காங்கே சளி இருமல் மற்றும் நோய்கள் பரவிவருகிறபடியால், இவற்றை உடனடியாக இந்த கழிவுநீர் சாக்கடையை செப்பனிட்டு இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் குப்பைக் கழிவுகளை கழிவுநீர் சாக்கடையில் கொட்டப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! இந்த குறுகிய தெருவில் கனரக லாரிகள் மற்றும் பெரும் சுமைகளை ஏற்றி வரும் வாகனங்கள் இந்த சந்தில் வருவதையும் தடை செய்யப்படவேண்டும்.... ஏனெனில் இது போன்ற வாகனங்கள் உள்ளே வந்து செல்வதால் தெருவில் உள்ள சாக்கடை சிதிலமடைந்து கழிவுநீர் தெரு முழுவதும் சிதறி செல்வதால் பாதசாரிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவலநிலை ? இது போன்ற செயல்களுக்கு தீர்வுதான் எப்போது ? இந்த பிரச்சினையினைப்பற்றி அரசு செய்தி மற்றும் ஆல் இந்தியா மீடியா அசோசியேஷனில் இரண்டு முறை வெளிவந்த பின்பும் கூட நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது எதற்காக ? யாருடைய தலையீட்டால் மெத்தனமாக இருந்து வருகிறது ? ஆக இந்த பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக தலையிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர்? உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ???.................................................................. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

55
1034 views