logo

தமிழ்நாடு - மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள் !!! மற்றும் குறிப்பாக தேனி மாவட்டத்திற்கும்....... ( தேனிக்கும்) தேவை மெமு இரயில் !!!

மதுரைஇரயில்வே கோட்டத்தில் தேவை மெமுஇரயில்கள் ......மற்றும்
கூடல்நகர் பணிமனை

சில வாரங்களாக மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்டங்களுக்கும் மெமோ ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் சோதனை அடிப்படையில் மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் எனப்படும் மெமு ரயில் தீபாவளி சிறப்பு இரயிலாக மதுரைக்கு வந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..

சென்னையைப் பொறுத்தவரையில் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், புறநகர் பகுதிகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் போக்குவரத்து எளிதாகவும் இருக்கிறது. வாகனப் பெருக்கம் அதிகரித்து சாலை மார்க்கம் நெரிசலாகி வருவதால் மெமு இரயில் மூலம் பலரும் நகர்பகுதிகளுக்கு வந்து செல்வது சுலபமாகி விடுகிறது.

இதன் அடிப்படையில், மதுரையை அடிப்படையாக கொண்டு திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை என இயக்கப்பட்டால், இந்த நகரங்களுக்கு இடையிலான கிராமங்கள் பெருமளவில் பயனடைவதுடன், பஸ் போக்குவரத்தைவிட மிகக் குறைந்த செலவில் தங்களது பயணத்தை பொதுமக்கள் பெற முடியும்.

தற்போது பகல் நேர ரயில் சேவை இருந்தாலும், தற்போது அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் இல்லை. தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக மதுரை உள்ளது. அதுமட்டுமன்றி, காய்கறியிலிருந்து பல்வேறு வகையான சந்தைகளுக்கு முக்கியமான இடமாகவும். சிறு, குறு மற்றும் பெருந்தொழில்களுக்கான நகரமாகவும் உள்ளது. அதேபோல், முருகனின் அறுபடை வீடுகளில் 4 படை வீடுகள் தென்மாவட்டங்களில் வருகின்றன.

அதேபோல், கேரளாவின் சபரிமலைக்கு செல்வோர் தேனி வழியை பிரதானமாக பயன்படுத்துகின்றனர். முருகன், ஐயப்பன் சீசன்களில் இப்பகுதிகளில் படையெடுக்கும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதல் சேவை தேவை என்பதை உணர்த்தும். சிவகாசியைப் பொறுத்தவரை பட்டாசு, அச்சுத்தொழில்; குறிப்பாக, இந்தியா முழுவதும் இங்கிருந்துதான் காலண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராஜபாளையம் முழுவதும் நூற்பாலைகள், பஞ்சாலைகள் நிறைய உள்ளன.

தென்காசியில் மரத்தொழில்கள், சாத்தூர், கோவில்பட்டி தீப்பெட்டித் தொழிற்சாலைகள், கடலை மிட்டாய் போன்ற சிற்றுண்டி வகைகள் இங்கு உள்ளன. அதேபோன்று தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. இதுபோன்ற மின்சார ரயில் சேவையால் சாமானியர்களின் பணம், நேரத்தை மிச்சமாகும். சுற்றுச்சூழல் மாசுபடுவதும் தவிர்க்கப்படும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் மதுரை கோட்டத்தில் மெமோ ரயில் சேவையை துவக்க வேண்டுமென மத்திய ரயில்வே இணையமைச்சர் சோமண்ணாவை சந்தித்து அகில பாரதிய கிரக பஞ்சாயத்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதை அடுத்து தற்போது சோதனை அடிப்படையில் மதுரையில் மெமு ரயில் இயக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெரிசலை கருத்தில் கொண்டு நவம்பர் மூன்றாம் தேதி 12 பெட்டிகள் கொண்ட முன்பதிவு இல்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

அந்த ரயில் அரக்கோணம் சேலம் இடையே இயக்கப்பட்ட நிலையில் சென்னை மதுரை இடையே சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டது . இந்த நிலையில் தற்போது இந்த ரயில் சேவையை சென்னை - தாம்பரம் - விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் - மதுரை வழியாகவும், மதுரையில் இருந்து தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களுக்கும் இயக்க வேண்டும் எனவும், குறைந்த தூர ரயில்களைப் போல மெமு ரயில்களையும், மின்சார ரயில்களையும் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது,

தென்னக இரயில்வேயில் உள்ள மற்ற அனைத்து கோட்டங்களில் மெமு இரயில் இயக்கப்படுகிறது திருவனந்தபுரம் கோட்டம் உருவாவதற்கு முன்பு இந்தியாவிலேயே மிகப் பெரிய பரப்பளவை கொண்ட முதன்மையான கோட்டமாக மதுரை கோட்டம் இருந்த நிலையில் இன்றளவும் மெமு இரயில்கள் இயக்கப்படாதது வேதனைக்குரியது தமிழ்ச்சங்கம் மூலம் மிகப்பழமை வாய்ந்த மதுரைக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டே வந்துள்ளது...

மேலும் கூடல்நகரில் மிகப்பெரிய அளவில் சரக்குக் கையாளும் பெட்டக வசதியும் இருக்கிறது ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட இரயில் பாதைகளும் இருக்கிறது ஆகவே அங்கு மெமு பணிமனை அமைந்தால் வடக்கு பகுதி மதுரை மக்களுக்கு மட்டும் அல்லாமல் தென் மாவட்டங்களுக்கு மிகப் பெரிய போக்குவரத்து குறைந்த வசதியில் கிடைக்கும்...

மேலும் மதுரை , காரைக்குடி புதிய இரயில்பாதை சர்வே எடுத்த போது கூடல்நகர் ,சத்திரப்பட்டி ,மேலூர் வழியாக அமைய இருந்தது ,அதன்படி நடந்தால் மதுரையின் வடகிழக்குப் பகுதியும் பயன்பெறும் .கூடல்நகர் சென்னைக்கு தாம்பரம் போல மதுரைக்கு கூடல்நகர் வருங்காலத்தில் பெரும் முனையமாக வளர்ச்சி பெறும் ஆகவே தற்போது சோதனை அடிப்படையில் மெமு ரயில் இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதனை தொடர்ந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமும் அந்தந்த பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்துவோம் ஊர்கூடி தேர் இழுத்தால் வந்து தான் தீர வேண்டும் எனவே இது காலத்தின் கட்டாயம் அனைவரும் தொடர் முயற்சியில் ஈடுபடுவோம்...மக்களே.!!!...................................................... ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

147
5776 views