தமிழ்நாடு - தேனி மாவட்டம் தேனியில் நகராட்சி ஆணையாளரிடம் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு !!!
தேனி மாவட்டம், தேனியில்
இந்து எழுச்சி முன்னணி சார்பாக
தேனிநகரபொதுசெயலாளர்
திரு .சிவராம்ஜீ அவர்கள் தலைமையில்
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டது..!!!
அந்த மனுவில் தேனியில் மனித சடலங்களை எரிப்பதற்காக பயோ கேஸ் முறை கடந்த 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது
அதனை தொடர்ந்து நவீன முறையில் தற்போது எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை எரிப்பதற்கு
பணி நடந்து வருவதாக கூறி நான்கு மாதங்களாக சுகாதாரம் இன்றி மனித சடலங்களை பொதுவெளியில் தகனம் செய்து வருகிறார்கள்.
எல்.பி.ஜி கேஸ் மூலம் மனித சடலங்களை தகனம் செய்வதற்கான பணிகள் முடிந்தும் கடந்த இரண்டு மாதங்களாக நடைமுறைக்கு வரவில்லை
இந்த தாமதத்திற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கும் பொதுமக்களுக்கும் எழுகிறது
எனவே எல்பிஜி கேஸ் மூலம் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்து நகராட்சி ஆணையாளரிடம் பொறுப்பாளர்கள் மனு கொடுத்தனர்.
தவறும் பட்சத்தில் பொதுமக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
தேனி நகர பொதுச்செயலாளர்
திரு சிவராமன் ஜீ
அவர்களுடன்..!!
தேனி நகர துணைத் தலைவர்
திரு சிவா ஜீ
தேனி நகர அமைப்பாளர்
அரண்மனை திரு முத்துராஜ் ஜீ
தேனி நகர செயலாளர்கள்
புயல் திரு ஐயப்பன் ஜீ
திரு தினேஷ்குமார் ஜீ
தேனி நகர துணைச் செயலாளர்கள்
திரு ராம்குமார் ஜீ
ஆட்டோ திரு செந்தில்குமார் ஜீ
திரு கனகு பாண்டி ஜீ
தேனி நகர செயற்குழு உறுப்பினர்கள்
திரு சுரேஷ் ஜீ
திரு அழகு பாண்டி ஜீ
E.B. திரு மணிகண்டன் ஜீ
கம்பம் திரு மணி பிரபு ஜீ
திரு செல்வராஜ் ஜீ மற்றும் பொறுப்பாளர்கள்
திரளாக கலந்து கொண்ட நிகழ்ச்சி ............................................................................ ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், தேசிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி.