logo

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு பரமக்குடி

[02/05, 12:33 pm] gopikgaiyer: நான் வாழும் ஊர் பரமக்குடி ல் நான் படிக்கும் காலத்தில் எல்லா பள்ளிகளிலும் குளம் என ஒன்று இருந்தது. அது தற்போது இல்லை. ✍️எனவே ஊரில் Hot climate அதிகரித்துவிட்டது...
கண்மாய் இருந்தது, அப்போது கண்மாயில் வீடு இல்லை. தற்போது அதில் ஆக்கிரமிப்பு ஆகி ஆயிரக்கணக்கான வீடுகள்.....
.. எல்லா கட்சியினர், அரசியல் வாதிகள், அதிகாரிகள் எல்லாம் கூட்டு 🤔
[02/05, 12:43 pm] gopikgaiyer: பரமக்குடி : எமனேஸ்வரம் பெரிய கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. ஆக்கிரமிப்புகளால், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த கண்மாயை நம்பி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எமனேஸ்வரம், காந்திநகர், நாகநாதபுரம், சுந்தனேந்தல், குமாரக்குறிச்சி, நகரகுடி, ஆழிமதுரையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆனால் கண்மாய், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மேடிட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி சுருங்கியுள்ளது.

இங்கிருந்து தண்ணீர் செல்ல பயன்படும் மடை, கால்வாய்களில் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளன. எமனேஸ்வரத்தில் இருந்து வைகை ஆற்றிற்கு வரும் வெள்ள போக்கி கால்வாய் முற்றிலும் அடைபட்டுள்ளது. மடைகள் மணல் மேடிட்டுள்ளன. நீர் வரும் காலங்களில் செல்ல வழியின்றி உள்ளது. இத்துடன் அனுமதியின்றி பிளாட்டுகள் விற்பனை தொடர்கிறது. உச்சக்கட்டமாக கண்மாயில் கட்டட கழிவுகளை கொட்டி இருப்பதோடு, கற்களை ஊன்றி வேலி அமைத்துள்ளனர்.

இதனால் வெள்ளம் வரும் காலங்களில், தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து, இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். எமனேஸ்வரம் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுப்பணித்துறையினர் தூர்வார வேண்டும்
Dr. சமீர் கான்
8610150615

2
463 views