logo

தமிழ்நாடு - தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே...!!! டாஸ்மாக்கிற்குக்கிற்குக்கூட தொடர்ந்து , 03 ( மூன்று) நாட்களுக்கு விடுமுறை விட்டாச்சு...!!! கேரள டாரஸ் லாரிகளுக்கு மட்டும் எப்பொழுது விடுமுறை அளிப்பீர்கள்....???

தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே...!!! டாஸ்மாக்கிற்குக்கிற்குக்கூட தொடர்ந்து , 03 ( மூன்று) நாட்களுக்கு விடுமுறை விட்டாச்சு...!!! கேரள டாரஸ் லாரிகளுக்கு மட்டும் எப்பொழுது விடுமுறை அளிப்பீர்கள்....???

தேனி +மாவட்டம் முழுவதும் , குறிப்பாக கிராம வழித்தடங்களில் அடிக்கடி பயணிக்கும், கேரள கனிம வள மாஃபியாக்களின் கனரக டாரஸ் லாரிகள் மட்டும் தேர்தல் விதிமுறைகளுக்கு கீழ் வராதா...... இந்த லாரிகளுக்கு மட்டும் என்ன விதிவிலக்கா.....?

தமிழக டிப்பர் லாரிகளும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல,.... தேர்தல் அதிகாரிகளே....!!!

அவர்கள் கொண்டு செல்வது கனிம வளமா? மாறாக, இப்போது நடைபெறப் போகின்ற தேர்தலுக்கான பணமும், பரிசுப் பொருட்களுமா...??? ஒன்றுமே புரியவில்லையே .......!!!

ஏன் தேனி மாவட்ட தேர்தல் அலுவலரே ! மற்றும் பறக்கும் படையினர்களே !!! இரண்டு/மூன்று சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் மட்டும் தங்கள் கண்களுக்கு தெரிகிறது? சரக்கு வாகனங்கள் தங்கள் கண்களுக்கு தெரிகிறது.?அரசு பேருந்து பயணிகளின் லக்கேஜ் மற்றும் கட்டைப் பைகளெல்லாம் தங்களின் கண்களுக்கு தெரிகிறது !!! ஆனால்....... இந்த கனரக கேரள டாரஸ் லாரிகள் மட்டும் தங்கள் பார்வைக்கு தெரியவில்லையோ...!!! என்னய்யா! கொடுமையிது....!!!

தேனி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட கேரள பதிவெண் கொண்ட கனரக டாரஸ் லாரிகள் , தினமும் 24x7 நேரமும் வலம் வருவது மட்டும் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையே ஏன்...? ஒருவேளை தங்களுக்கு தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறீர்களா ...?... எதற்காக ?.....

தேர்தல் நேரம் என்பதை மனதில் வைத்தாவது பட்டி,தொட்டிகளில் அடிக்கடி வந்து போகும், கனிமவள கேரளா டாரஸ் லாரிகளின் ஓட்டங்களை நிறுத்தலாமே...?

ஏன் அவர்கள் கொண்டு செல்வது பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களா...?

ஏம்ப்பா பைபாஸ் வழியா போங்கப்பா, உங்கள யாரு கேக்க போறா...? டோல்கேட் இருக்கு, டோல் கேட்ல கேமரா இருக்கு அப்படிங்கற பயமா...? நாங்கள் உச்ச நீதி மன்றத்துல கைகட்டி கூண்டேறி பதில் கூற வேண்டுமெனும் அச்சமா...?.... அல்லது பயமா.....?..... ஒன்றுமே விளங்கவில்லை.... இது தான் தேர்தல் நேரத்திலும் கூட நடந்து கொண்டிருக்கும் லட்சணம்............... இவைகள் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாவட்ட காவல்துறை நிர்வாகம், கனிம வளத்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்....!!!...... பொறுத்திருந்து பார்ப்போம்!!!......................................................................... ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி.


115
4313 views