தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (04.08.2021) காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொது மக்களுக்கு 01.04.2021 முதல் 03.08.2021 முடிய மொத்தம் 7,395 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக 04.08.2021 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கீழ்க்;கண்ட இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - பாத்திமா நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - திரேஸ்புரம், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - தருவை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - மடத்தூர், மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - முள்ளக்காடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - லூர்தம்மாள் புரம், புனித தாமஸ் மேல்நிலைப் பள்ளி - இஞ்ஞாசியார்புரம், தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - மில்லர்புரம், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி - திருச்செந்தூர் ரோடு, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதியில், சத்துணவு மையம் - சவேரியார்புரம், சத்துணவு மையம் - மாதவன் நகர், புதுக்குளம், அரசர்குளம், ஆதிச்சநல்லூர், வெள்@ர், தண்டுபத்து, தைக்காவூர், அரசு பொது மருத்துவமனை - திருச்செந்தூர், அரசு பொது மருத்துவமனை - காயல்பட்டினம், கொம்பன் புதூர்பூந்தோட்டம், செம்பூர்,முஸ்லீம் தெரு, நொச்சிகுளம், ஸ்ரீகிருஷ்ணாபேரி, அரசு பொது மருத்துவமனை - கோவில்பட்டி, நகராட்சி அலுவலகம் பூங்கா சாலை - கோவில்பட்டி, ராஜா மேல்நிலைப்பள்ளி - எட்டையபுரம், நகர்நல மையம் - ஸ்ரீராம்நகர், கோவில்பட்டி, அங்கன்வாடி மையம் - சந்திரகிரி, அங்கன்வாடி மையம் - மேலசெய்தலை, அங்கன்வாடி மையம் - பாறைகுட்டம், அங்கன்வாடி மையம் - நாகம்பட்டி, சத்துணவு மையம் - சவலாபேரி,ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், சத்துணவு மையம் - வாகைகுளம்,ஆரம்ப சுகாதார நிலையம் - கயத்தார், துணை சுகாதார நிலையம் - தீத்தாம்பட்டி,ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், சத்துணவு மையம் - கோவிந்தம்பட்டி,ஆரம்ப சுகாதார நிலையம் - கடம்பூர், சத்துணவு மையம் - திருமங்கலகுறிச்சி,ஆரம்ப சுகாதார நிலையம் - வெள்ளாளன்கோட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி,பேரூராட்சிகள் - கழுகுமலை, கலைஞர் கிளினிக் - விளாத்திகுளம், சமுதாய நலக்கூடம் - இனாம்சுப்பிரமணியபுரம், சமுதாய நலக்கூடம் - வள்ளிநாயகிபுரம், சமுதாய நலக்கூடம் - மீனாட்சிபுரம், சமுதாய நலக்கூடம் - கோட்டநத்தம், சமுதாய நலக்கூடம் - கழுகாசலபுரம், ஊராட்சி பொது நூலகம் - கோட்டூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி - வேம்பூர், இ சேவை மையம் - இடைச்சியூரணி ஆகிய இடங்களில் பொது மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.