கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த திரு.எடியூரப்பா அவர்கள்
கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த திரு.எடியூரப்பா அவர்கள்
இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் கொண்டு வந்த ஒரு மாநில முதல்வர்...
இந்தியாவிலேயே மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டு வந்த முதல்வர்...
இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பசு காப்பகம் கொண்டு வந்த முதல்வர் ...
தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்த கர்நாடக முதல்வர்...
ஒரு வார்டு கவுன்சிலராக தனது அரசியல் பயணத்தை துவக்கி தனது கட்சியையே ஆட்சி அரியணையில் அமர வைத்த அரசியல் சாணக்யர்...
தென் பாரதத்தில் முதன் முறையாக பாஜக ஆட்சி ஒரு மாநிலத்தில் அமைய காரணமானவர்...
நரேந்திர மோடி அவர்கள் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் பாஜக ஆட்சி அமைவது உறுதி என 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதே நரேந்திர மோடி அவர்களின் பெயரை பிரதமர் வேட்பாளருக்கு முன்மொழிந்த முதல் பாஜக தலைவர்...
நான்கு முறை முதல்வராக பதவி வகித்தவர். மூன்று முறை எதிர்கட்சி தலைவராக பணியாற்றியவர். ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் பாஜக பின்னடைவை சந்தித்த போதும் கர்நாடக மாநிலத்திலுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைத்தவர்...
2021 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகவில் மொத்தமுள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளிலும் பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர் 1 தொகுதி என 26 தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைத்தவர்...
ஆபரேஷன் லோட்டஸ் என்கிற பெயரில் எதிர்கட்சிகளை உடைக்கும் அரசியல் ராஜதந்திரத்தை பாஜகவில் நடைமுறை படுத்திய ஒரு மாநில முதல்வர்...
திரு.எடியூரப்பா அவர்களின் ராஜினாமா செய்தி அறிந்து கண்கள் கண்ணீரில் நனைகிறது...