logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசியில் ,காங்கிரஸ் தொழிலாளர் யூனியனில் ராஜீவ் காந்தி நினைவேந்தல்...

21/05/2026 இன்றைய தினம் தென்காசியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தில்,மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு மாநில துணைத்தலைவர் Dr.R.S.K.துரை தலைமையில் ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி , நினைவேந்தல் உரையாற்றினார்.

நிகழ்ச்சி அமைப்பாளர் ,மாநில தொழிற்சங்க செயலாளர் INTUC செங்கை கண்ணன் மற்றும் தமிழ்நாடு SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S.கணேசன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.மாநில காங்கிரஸ் உறுப்பினர் மோகன் அருணாச்சலம்,மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சிவராமகிருஷ்ணன் ஆயிரப் பேரி லட்சுமணன்,மாவட்ட காங்கிரஸ் அமைப்பு செயலாளர்கள் திருமலையப்பன் ,இலஞ்சி அகிலாண்டம், குற்றாலம் நகர காங்கிரஸ் தலைவர் துரை,இலக்கிய அணி அமனுல்லா,மகளிர் அணி காந்திமதி, கடையநல்லூர் மாடசாமி, SRS ரமேஷ், தென்காசி முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் முருகன், அச்சம்பட்டி செல்லையா பாண்டியன் , தமிழ் பெருமாள் ,கட்டளை குடியிருப்பு விவசாய சங்க தலைவர் முகேஷ் வடகரை உசேன் மைதீன் கீழப்பாவூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜசேகர், தென்காசி நயனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

18
440 views

Comment