குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்துக்கு 20,000 டன் எல்.பி.ஜி.,யுடன் வந்தது கப்பல்
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து, 20,000 டன் எல்.பி.ஜி., யுடன் சரக்கு கப்பல், குஜராத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்த போரால், தன் எல்லையை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை, மேற்காசிய நாடான ஈரான் முடக்கியுள்ளது. மறுபக்கம், அமெரிக்கப் படைகள் முற்றுகையிட்டுள்ளன.
இதனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மேற்காசிய நாடான கத்தாரில் இருந்து மார்ஷல் தீவு கொடியுடன் புறப்பட்ட 'எம்.வி. சிமி' என்ற என்ற கப்பல் கடந்த 13ம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தது. அந்த கப்பல் குஜராத்தின் காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தை வந்தடைந்தது.
கடந்த மார்ச் முதல் இந்தியா வந்த 13 கப்பல்கள் ஹார்முஸ் துறைமுகத்தை கடந்துள்ளன. இதில் 12 எல்.பி.ஜி., டேங்கர்களுடனும், ஒன்று கச்சா எண்ணெய் ஏற்றி வந்தவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.