கலைப்பிரிவு துணைத் தலைவர் Dr.R.S.K. துரை 12ம் வகுப்பு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து
தமிழகக் காங்கிரஸ் பேரியக்கத்தின் கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் Dr.R.S.K. துரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இன்றைய தினம் வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் குறித்து அவர், முழு மனதுடன் படித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களை கூறியதுடன், தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களும் மனச் சோர்வு இல்லாமல் கல்வி பயணத்தில் முன்னேற வேண்டும் என்று ஊக்குவித்தார்.