logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசி: காங்கிரஸ் சார்பில் கவர்னர் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தென்காசி: 08/05/2026 அன்று காலை 11 மணியளவில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் இந்திய அரசியலமைப்பின் படி தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் மேதகு அர்லேக்கர் மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாநில தமிழ்நாடு காங்கிரஸ் கலை பிரிவு துணைத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் R.S.K.துரை MA BL DD தலைமையில், நகர காங்கிரஸ் தலைவர் ஜோதிடர் டாக்டர் மாடசாமி, மாநில SC துறை செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், மாநில INTUC செயலாளர் சங்கை கண்ணன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சிவராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் R.S.K.துரை உரையாற்றி, இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி மேதகு கவர்னர் தனி பெரும் பெரும்பான்மையுள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதே மரபு எனவும், ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் திமுக, அதிமுக கூட்டணியை அமைக்க கவர்னர் ஆலோசனை வழங்குவது அரசியல் அறத்துக்கு மாறானது என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களை முதல்வராக ஆட்சி அமைக்க தடுப்பது அரசியல் நெறிக்கு எதிரான செயல் என அவர் தெரிவித்தார். முன்னாள் முதல்வர்கள் ஜானகி, எம்.ஜி.ஆர் மற்றும் எடப்பாடி பதவியேற்ற போது அரசியல் விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் சட்டத்திற்கு தடையாக இருந்து தமிழ்நாடு பொறுப்பு கவர்னரை இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0
0 views

Comment