logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் தி.மு.ராஜேந்திரன் வெற்றி

தென்காசி: கடந்த ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. 04/05/2026 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக வேட்பாளர் தி.மு.ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 220 வாக்காளர்களில் 2 லட்சத்து 19,181 பேர் வாக்களித்தனர், இது 81.41 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

தி.மு.ராஜேந்திரன் 79,832 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளியை விட 6,253 வாக்குகள் அதிகமாக வெற்றிபெற்றார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ண முரளி வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்போது தி.மு.ராஜேந்திரன் தொகுதியை கைப்பற்றினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவு மாநில துணை தலைவர் Dr.R.S.K. துரை மற்றும் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் ஆகியோர் வெற்றியாளருக்கும் மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

6
526 views

Comment