மதுரை மேலூர் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் வெற்றி
தமிழ்நாடு: நடந்த முடிந்த 17வது சட்டமன்ற தேர்தலில், மதுரை மாவட்டத்தின் மேலூர் பொதுத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் திரு. விஸ்வநாதன் வெற்றிபெற்றார். அவர் காஞ்சிபுரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப் பிரிவு மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் Dr. R.S.K. துரை, SC பிரிவு மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ். கணேசன் மற்றும் விசிக நகர செயலாளர் E. பாக்கியநாதன் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.