logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசியில்,சர்வதேச உழைப்பாளர் தின வாழ்த்து செய்தி தெரிவித்த Dr. R.S.K. துரை...

01/05/2026 நேற்றைய தினம் சர்வதேச "மே" தினமாகும்.இந்நாளில் தொழிலாளர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் உறுப்பினரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலை பிரிவின் மாநிலத் துணைத் தலைவருமான வழக்கறிஞர் டாக்டர் R.S.K.துரை MA BL D.D அவர்களின் வாழ்த்து செய்தியில் ....

உழைக்கும் "தோழர்களே ஒன்று கூடுங்கள்",
"உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்" !,
"மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்", "தலைவர் #ராகுல் காந்தி " சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள் .

1886 ஆம் ஆண்டு " மே மாதம் முதல் நாளில்" அமெரிக்க தேசத்தில் சிகாக்கோ நகரில் வெடித்த மாபெரும் தொழிலாளர் புரட்சியில், ஆதிக்கவாதிகளின் அடக்கு முறையால் இரத்த ஆறு ஓடியது. அந்த வெள்ளத்தில் பூத்த புரட்சி மலர்தான் "மே தினம் " என்ற சர்வதேச உழைப்பாளர் தினம் ஆகும்.
இந்த நிகழ்வை நினைவு கூறும் சர்வதேச தொழிலாளர் தினம், உழைப்பின் மேன்மையை உணர்த்தும் இந்த நாள் 1889இல் பாரிசில் நடைபெற்ற சர்வதேச கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 1923ல் சென்னையில் ம. சிங்காரவேலர் தலைமையில் "முதல் மே தினம்" கொண்டாடப்பட்டது. இதுவே இந்தியாவில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்ட முதல் நிகழ்வாகும்.
தொழிலாளர் ஒற்றுமையின் அடையாளமாக "மே தினம்" உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்று வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி பிரிவு மாநில செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன் தெரிவித்துள்ளார்.

0
132 views

Comment