logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

புதுச்சேரியில் இருந்து 1.680 லிட்டர் மதுபானம் கொண்டு வந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்

ஒருவர் தன் சொந்த நுகர்வுக்காக 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதியளித்து தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை பிறப்பித்துள்ளது என்று மனுதாரர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
சென்னை: தமிழகத்தில் தனி நபர் ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்திருக்க விதிகள் அனுமதிக்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 1.680 லிட்டர் மதுபானம் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையின்போது வல்லரசுவின் வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 2 மது பாட்டிங்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 1 மதுபாட்டில் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்
mk stalin
விஜய்
admk

தமிழ்நாடு

tamil nadu

நேரலை
தமிழ்நாடு
தேர்தல் களம் 2026
IPL 2026
தேசம்
என்டர்டெயின்மெண்ட்
லைஃப் ஸ்டைல்
நலம் வாழ
சாம்பியன்
உலகம்
வீடியோ
ETV Bharat / state

புதுச்சேரியில் இருந்து 1.680 லிட்டர் மதுபானம் கொண்டு வந்த வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
ஒருவர் தன் சொந்த நுகர்வுக்காக 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதியளித்து தமிழக அரசு கடந்த 2017-ல் அரசாணை பிறப்பித்துள்ளது என்று மனுதாரர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)
author img
By ETV Bharat Tamil Nadu Team

Published : April 25, 2026 at 7:36 PM IST

1 Min Read
Choose ETV Bharat

சென்னை: தமிழகத்தில் தனி நபர் ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்திருக்க விதிகள் அனுமதிக்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 1.680 லிட்டர் மதுபானம் வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காட்டுமயிலூரை சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையின்போது வல்லரசுவின் வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட 750 மில்லி லிட்டர் அளவு கொண்ட 2 மது பாட்டிங்கள், 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 1 மதுபாட்டில் இருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதையும் படிங்க..சென்னையில் எல்.பி.ஜி கேஸ் தட்டுப்பாடு: ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

அந்த 3 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், புதுச்சேரி மது தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதால் வல்லரசு மீது தமிழ்நாடு மது தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது கடலூர் விரைவு நீதிமன்றத்தல் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, வல்லரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பாலாஜி, "ஒருவர் தன் சொந்த நுகர்வுக்காக 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதியளித்து தமிழக அரசு கடந்த 2017 -ல் அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், மனுதாரர் 1.680 லிட்டர் மது மட்டுமே வைத்திருந்தார். எனவே, அவர் மீது எந்த குற்றச்சாட்டும் கூறமுடியாது என்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒருவர் இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவை 4 லிட்டர் 500 மில்லி லிட்டர் வைத்திருக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் விதியில் உள்ளது. மனுதாரரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மதுவின் அளவு 1.680 லிட்டர் என்பதால், மனுதாரர் மீது வழக்கு தொடர முடியாது" என்று உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கையும் ரத்து செய்தார்.

0
235 views

Comment