கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள்...
23/04/2026 அன்று தமிழக சட்டமன்றத்தின் 17 வது தேர்தல் நடந்து முடிந்தது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்களில் ஆண்கள் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 9,பெண்கள் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 194,மற்றவர்கள் 17 ஆக மொத்தம் 2 லட்சத்து 69 ஆயிரத்து 220 ஆகும்.
பதிவான ஓட்டுகளின் நிலவரம் ஆண்கள் 99 ஆயிரத்து 749,பெண்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரத்தி 782,மற்றவர்கள் 8, மொத்தம் பதிவான ஓட்டுகள் 2,17,539 ஆகும்.வாக்குகள் சதவிகிதத்தில் 80.8% பதிவான வாக்குகள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அட்வகேட் ,Dr. R.S.K.துரை,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ்.கணேசன், விசிக கடையநல்லூர் தொகுதி தேர்தல் நிர்வாக குழு உறுப்பினர் E. பாக்கியநாதன் ,விசிக கடையநல்லூர் நகர துணைச் செயலாளர் தில்லை எஸ் .நடராஜன் ஆகியோர் வெளியிட்ட தருணம்.