logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கடையநல்லூரில்,இந்தியா கூட்டணியின் வேட்பாளருக்கு விசிக சார்பில் வரவேற்பு...

18/04/2026 அன்று தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் தி. மு. ராஜேந்திரனுக்கு, கடையநல்லூர் நகர 17 வது வார்டு Dr.அம்பேத்கார் தெருவில், விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, விசிக நிர்வாகிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்வில் கடையநல்லூர் விசிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோசஸ், மண்டல செயலாளர் எம். கே.இசக்கி பாண்டியன் , முன்னாள் மாவட்ட செயலாளர் SKSS. ஜான் தாமஸ்,கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின் நகர செயலாளர் இ. பாக்கியநாதன் ,மற்றும் திமுக சார்பில் வார்டு செயலாளர் எம்.பெருமாள் துரை மற்றும் நிர்வாகிகள்,பொதுமக்களுடன் வாக்கு சேகரித்தனர் .

0
46 views

Comment