logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

‘பொதுமக்களுக்கு தெளிவான தகவல்களை வழங்க வேண்டும்’ சார்ஜபிள் ஒலிபெருக்கி வழங்கி, கரூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளர் உத்தரவு !

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரண் பிரசாத் இ.கா.ப., அவர்கள் (10.04.2026) இன்று 3 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களுக்கு சார்ஜபிள் ஒலிபெருக்கி (கையடக்க ஒலிபெருக்கி) கருவிகளை வழங்கினார்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறப்பாகவும், அனைவருக்கும் தெளிவாக கேட்கும் வகையிலும் நடத்துவதற்காக இவ்வொலிபெருக்கிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக போக்குவரத்து பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை பரப்புவதற்கு இவை பயன்படும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்வொலிபெருக்கிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் தங்களது காவல் வாகனங்களில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும், தேவையான நேரங்களில் உடனடியாக பயன்படுத்தும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டார்.
அத்துடன், கருர் மாவட்ட ஆண் மற்றும் பெண் அதிவிரைவு படையினர் பெண்கள் மற்றும் ஆண்கள் அதிகம் கூடும் இடங்களில் நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இவ்வொலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தெளிவான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
-திருச்சி பிரசன்னா

5
807 views

Comment