கடையநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு...
14/04/2026 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மதிமுக வேட்பாளரான வழக்கறிஞர் தி. மு. இராசேந்திரன் அவர்களுக்கு ,உதயசூரியன் சின்னத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கலை பிரிவின் மாநில துணைத்தலைவர் இலக்கியத் தென்றல் Dr. ஆர். எஸ்.கே.துரை அவர்கள். புளியரை தெற்கு மேடு, தாட்கோ நகர், புதூர், , கட்டளை குடியிருப்பு, செங்கோட்டை தாலுகா ஆபிஸ் ,செங்கோட்டை டவுன், செங்கோட்டை ரயில்வே கேட் , பண்பொழில், சிவநல்லூர், இலத்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் கே. எஸ்.கணேசன்,விசிக சட்டமன்ற நகரச் செயலாளர் E. பாக்கியநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடும் கலந்து கொண்ட தருணம்.