கோவை வடக்கு தொகுதி வேட்பாளரான வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களின் நல்வாழ்த்துகளுடனும், மக்களின் பேராதரவுடனும்.., என கூறி இன்று கோவை வடக்கு தொகுதி வேட்பாளரான பாஜக .தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில் ராஜஸ்தான் முதல்வர் திரு. பஜன்லால் சர்மா , தமிழக பாஜக முன்னாள் தலைவர் திரு. கே.அண்ணாமலை , அதிமுக வடவள்ளி சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்தார்.
-திருச்சி பிரசன்னா