logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

“சலீம் அதிரடி அறிவிப்பு: தென்காசியில் தேர்தல் பணிகளை புறக்கணிக்கும் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு!”

தென்காசியில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவில் பரபரப்பு: தேர்தல் பணிகளை புறக்கணிக்க சலீம் அறிவிப்பு
தென்காசி:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, மாநில சிறுபான்மை பிரிவுக்கு முழுமையான அங்கீகாரம் வழங்காததுடன், தொடர்ந்து புறக்கணிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தென்காசி மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் சலீம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “சிறுபான்மை பிரிவுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கப்படாததால், தென்காசி மாவட்டம் முழுவதும் நடைபெறும் தேர்தல் தொடர்பான பணிகளில் சிறுபான்மை பிரிவு இனி ஈடுபடாது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகும் சூழல் உருவாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

7
233 views

Comment