logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஏ ஆர் பதிவு செய்தவுடன் அவசர அவசரமாக எஃப் ஐ ஆர் பைல் செய்த வெங்கல் காவல் துறைக்கு திறன் பட செயல்பட்டதற்கு விருது வழங்கப்படுமா ?



திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் வெங்கல் காவல் துறை அதிகாரிகள் அன்று 30/03/2026 வித்தியாசமான வழக்கு ஒன்றில் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளது புது குப்பம் என்ற கிராமத்தில் ஒரே சமுதாயம் மற்றும் உறவினர்கள் இடையே சில நாட்களுக்கு முன்பு சலசலப்பு இருந்தது தொடர்ந்து 29/03/2026 அன்று இரவு 9 மணி அளவில் சுப்பிரமணி என்ற நபருக்கும் ராஜேஷ் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ராஜேஷ் அவர்களின் மகன் காவல்துறை அவசர கட்டுப்பாட்டு எண்க்கு 100 பலமுறை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர் எங்கள் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்று காத்தி காதரி பலமுறை தொடர்ந்து விடாமல் அழைத்துள்ளார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆனால் மெத்தனம் காட்டிய காவல்துறை இதோ காவலர்கள் வருவார் அதோ வருவார் என்று சாக்குபோக்கு சொல்லி பல மணி நேரம் வராமல் தாமதித்துள்ளனர் ஒரு கட்டத்திற்கு மேலாக எதிர் தரப்பினருக்கும் இவர்களுக்கும் கைகலப்பு உண்டாகியுள்ளது அதில் முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் முதியவருக்கு தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது இதை அரசு மருத்துவ அதிகாரிகள் என்ன நடந்தது என்று முதியவரிடம் கேட்டு வெங்கல் காவல்துறைக்கு தகவல் கூறியுள்ளனர் இதை அடுத்து நள்ளிரவு 2 மணி அளவில் ஊருக்குள்ள புகழ்ந்து ராஜேஷ் குடும்பத்தில் புகுந்து வீட்டில் உள்ள அனைவரையும் அவரது இரண்டு மகன்களையும் தூக்கிச் சென்று வெங்கல் காவல் நிலையத்தில் விசாரணை என்று விடிய விடிய மனித உரிமை ஆத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் காவல்துறை அதிகாரிகள் இதில் எதிர் தரப்பினர் பெண்களை தாக்கியும் இழிவு படுத்தியும் கொச்சையாகவும் பேசியுள்ளனர் இதற்கு புகார் கொடுக்க வேண்டும் அவரது கைபேசியில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று ராஜேஷ் அவரது மகன்களின் கைபேசியை அவரது உறவினர் ஒருவர் கேட்டபோது டேய் ஒழுங்கு மரியாதையா வெளியே போ இல்லை என எஃப் ஐ ஆர் இல் உன்னையும் குற்றவாளியாக சேர்த்து விடுவோம் என்று காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் பகிரங்கமாக மிரட்டி உள்ளனர் அது மட்டும் இன்றி அவரை ஓரிமையில் வசை பாடி உள்ளனர் இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் முரளி அவர்களிடம் கேட்டபோது முதியவருக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார் இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் கரன் அவர்களை கேட்டபோது எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை இது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை காவலர்கள் அவர்களை அழைத்து வந்து காவல் நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர் நீங்கள் எதுவாக இருந்தாலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடமே பேச வேண்டும் என்று உள்ளார் ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவரிடத்திலே கேட்டபோது அவர் எனக்கு எதுவும் தெரியவில்லை சிறிது நேரம் கொடுங்கள் விசாரித்து சொல்கிறேன் என்று பல மணி நேரமாக எந்த பதிலையும் கூறவில்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் அப்படியெல்லாம் யாரையும் அனுப்பவில்லை AR வைத்து பெரியவரின் வாக்குமூலத்தை வைத்து தான் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்று கூறினார்கள் ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 13 தையல்கள் தலையில் போடப்பட்டுள்ளது என்று கூறப்பட்ட பெரியவர் மதியம் ஒரு மணி அளவில் போலி வழக்கு எங்கே பதிவிடுவார்களோ அவரது உறவினர் மீது என்று அவசர அவசரமாக அவரும் அவரது மகனும் காவல் நிலையத்திற்கு நோக்கி வந்துள்ளனர் ஐயா நாங்கள் தான் புகார் எதுவும் கொடுக்க வில்லையே நீங்கள் எந்த விசாரணையும் இருதரத்தையும் நடத்தவில்லையே அப்படி இருந்து எவ்வாறு வழக்கு பதிவு செய்ய முடியும் வழக்கெல்லாம் எங்களுக்கு வேண்டாம் உங்கள் சமரசமாக சென்று விடுவோம் என்று கூறியவுடன் பெரியவரை பார்த்து யோவ் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது நீ போய் நீதிமன்றத்தில் என்று உள்ளனர் காவல் துறை அதிகாரிகள் இதில் அவதியில் உள்ள விவரம் அறிந்தவர்களை கேட்டபோது சில முக்கிய தகவல்கள் கிடைத்தன அதில் வழக்கு பதிவு செய்துள்ள நபருக்கு சொந்தமாக சரக்கு வாகனம் உள்ளதாகவும் அதற்கு அந்த நபர் காவல் நிலையத்திற்கு சரியான முறையில் மாமன் கொடுக்க மறுத்ததாகவும் ஆகையால் வன்மத்தில் இருந்த காவல்துறை தங்களின் வஞ்சனையை தீர்த்துக் கொண்டது என்று குறிப்பிடுகின்றனர் சட்ட வல்லுநர்கள் எது எப்படியோ இனி அடிபட்ட நபர்கள் புகாரை கொடுக்கவில்லை என்றால் கூட ஏ ஆர் வைத்தேன் காவல்துறை எந்த விசாரணை என்று அவர்கள் விருப்பத்திற்கு எல்லோர் மீதும் தாறுமாறாக வளர்த்து பதிவு செய்வார்கள் இதை உயர் அதிகாரிகளும் கைகட்டி வாய் பொத்தி நிற்பார்கள் வெங்கல் காவல்துறை மீது அதிகாரிகள் மீது மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள்

64
2331 views

Comment