சமூக ஆர்வலர்கள் முனைப்பில் முதியோருக்கு நூலகம்
மேடவாக்கம் முதியோர் இல்லத்தில் புதிய நூலகம் திறப்பு
தாம்பரம் அடுத்த மேடவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ரஜினிகாந்த் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோரின் வேண்டுகோளை முன்னிட்டு புதிய நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த இல்லத்தில் சுமார் 25 ஆதரவற்ற முதியோர் தங்கி வருகின்றனர். அவர்கள் தங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட நூலகம் அமைத்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர். இதனை முன்னிட்டு, சமூக ஆர்வலர்கள் திரு சாய்பாலு, திரு பெருமாள், திரு சரவணபெருமாள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 11.03.2026 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நூலகம் தொடங்கப்பட்டது.
நூலகம் தொடங்கப்பட்டதை முதியோர் மகிழ்ச்சியுடன் வரவேற்று, இது தங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என நன்றி தெரிவித்தனர்.
மேலும், நூலக திறப்பு விழா நாளில் திரு சாய்பாலு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.