logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கம்பம் அருகேயுள்ள சாமுண்டீஸ்வரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கம்பம், மார்ச்.25-
கம்பம் அருகேயுள்ளது சாமுண்டீஸ்வரியம்மன் என்ற சாமாண்டியம்மன்கோவில் பழமை வாய்ந்த்த இக்கோவில் பசுமை சூழ்ந்த வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. கம்பம் கம்பராயப்பெருமாளின் தங்கையும் ஆவார். இக்கோவிலில் கடந்த 1938 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பிறகு திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை, இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் பக்தர்கள் கம்பம் எம்.எல்.ஏ இராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் இந்து சமய அறநிலைத்துறையிடம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அனுமதி பெற்று தந்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த 23ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி , முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கும்பங்களை சாமுண்டீஸ்வரியம்மன் மூலவர் , விநாயகர், முருகன், பைரவர் ஆகிய சுவாமி மற்றும் விமானங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளம் வாத்தியம் ஒழிக்க புனித நீரை கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டன. இதில் இந்து சமய அறநிலைத்துறை கம்பம் கம்பராய பெருமாள் கோவில் செயல் அலுவலர் நதியா (பொறுப்பு), தேனி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெய பாண்டியன் ,முருகேசன், மதிமுக மாவட்ட செயலாளர் இராமகிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன், மற்றும் பூசாரிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

296
6122 views

Comment