logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

டில்லியில் ஆயுத கடத்தல் கும்பல் சிக்கியது; வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்பு

டில்லியில் டில்லியில் எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்த 10 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

டில்லியில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பல், குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கர சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த கும்பலை சேர்ந்த 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

சிறப்புப் படைகளால் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் PX-5.7 கைத்துப்பாக்கி உட்பட, PX-5.7 கைத்துப்பாக்கிகள், PX-3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட மொத்தம் 21 உயர் ரக வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

இந்த ஆயுதங்கள் இந்திய-நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தப்பட்டு, டில்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குற்றச்செயலில் ஈடுபடும் கும்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன என்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

0
0 views

Comment