logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தென்காசியில் காங்கிரஸ் பரபரப்பு கூட்டம் – நிர்வாகிகள் கருத்து கேட்பு தீவிரம்!

தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் கருத்து கேட்புக் கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆலங்குளம் திரு. செல்வராஜ் தலைமையேற்றார்.
முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் திரு. பழனி நாடார் எம்.எல்.ஏ., திரு. S.K.T.B. காமராஜ் மற்றும் தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் திரு. உதயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி மாவட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் திரு. செல்வக்குமார் மற்றும் திரு. ஆண்டனி விஜிலியஸ் கிளமண்ட் கலந்து கொண்டு, நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தனர்.
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு. சட்டநாதன், திரு. சங்கை கணேசன், திரு. நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர்கள் கிளங்காடு திரு. மணி, திரு. S.R. சுப்பிரமணியன், திரு. சேர்மச்செல்வம், திரு. பால், திரு. சமுத்திரம், திரு. சுந்தரையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், மாவட்ட நிர்வாகிகள், வட்டார மற்றும் நகர தலைவர்கள், பொறுப்பாளர்கள், பேரூர் மற்றும் கிராம காங்கிரஸ் தலைவர்கள், துணை அமைப்பு நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத் துறை நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

5
58 views
1 shares

Comment