logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

திடீர் வருகை, தீவிர ஆய்வு: தாம்பரம் கஸ்தூரிபாய் நகரில் அரசியல் பரபரப்பு!

சென்னை அருகிலுள்ள தாம்பரம் மாநகராட்சி பகுதியில், கஸ்தூரிபாய் நகர் 50வது வார்டில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை மனிதநேய மக்கள் கட்சி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது அவர்கள் நேரில் பார்வையிட்டார்.



இந்த ஆய்வுப் பயணத்தில், மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் எம். யாகூப், தாம்பரம் மாநகராட்சி 50 வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் சலீம்முல்லா கான் , ஆகியோரும் இணைந்திருந்தனர். அவர்கள் அந்த பகுதியின் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நிலைமை மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து, அங்கிருந்த மக்களிடமும் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தனர்.



பார்வையின்போது, தமிழக காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த திடீர் ஆய்வு மற்றும் உயர்நிலை வருகை காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனால், பொதுமக்களிடையே இந்த நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், பகுதியின் பிரச்சினைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

67
7275 views

Comment