logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

சாத்தான்குளம் ,தந்தை மகன் கொலை வழக்கின் தீர்ப்பில் 9 காவலர்களும் குற்றவாளிகள்.

23/03/2026 . சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று மதுரை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் உள்பட போலீசார் பால்த்துரை, முத்துராஜ்,சாமத்துரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ், முருகன் ஆகியோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்ததால் இன்று நீதிபதி தனது தீர்ப்பின் உத்தரவில் ஒன்பது காவலர்களும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் தந்தை மகன் இருவருக்கும் போலீசாரால் தான் காயங்கள் ஏற்பட்டது ஊர்ஜிதமாகி உள்ளது. அடித்து பழக அப்பா .மகன் கிடைத்துள்ளனர் என போலீசார் பேசியுள்ளனர்.இரவு முழுதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு தாக்கியுள்ளனர் என நீதிபதி முத்துக்குமரன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

4
103 views

Comment