logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ராமதாஸ் - சசிகலா கூட்டணி கையெழுத்தானது..! தமிழகத்தில் 5 முனை போட்டி..! பரபரக்கும் தேர்தல் களம்..!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி கையெழுத்தானது..! தமிழகத்தில் 5 முனை போட்டி..! பரபரக்கும் தேர்தல் களம்..!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணி உருவாக உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து பேசினார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று ராமதாஸை சந்தித்து சசிகலா ஆலோசனை நடத்தினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் - அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் சசிகலா இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தில் ராமதாஸ் - சசிகலா இருவரும் கையெழுத்திட்டனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 4 முனைப்போட்டி உருவான நிலையில் சசிகலா - ராமதாஸ் இணைந்து போட்டி என அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ராமதாஸ், வி.கே.சசிகலா கட்சிகள் இணைந்து போட்டியிட விரும்புவதாக கூட்டாக அறிவித்தனர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் " எங்கள் கூட்டணியில் சேர விரும்புவோர், எங்கள் இருவரிடமும் ஆலோசித்துவிட்டு இணையலாம்.. துரோக அடையாளங்களை களைந்து, மக்கள் நலன், தமிழகத்தின் சுயமரியாதை, தன்னாட்சியை மேம்படுத்தவே கூட்டணி என்று அவர் தெரிவித்தார்.. வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம்.. இதுவெற்றிக் கூட்டணி; தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம்.. ” என்று தெரிவித்தார்.

0
0 views

Comment