logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

“லைலத்துல் கதிரை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு தொழுகை வசதி – தாம்பரத்தில் பாராட்டு”

தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டில் உள்ள கஸ்தூரிபாய் நகர் இஸ்லாமிய சுன்னத்துல் ஜமாத் பள்ளிவாசலில் தராவி தொழுகை நடைபெற்று வருகிறது. லைலத்துல் கதிர் இரவு என்பதால் பெண்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழுகைக்கான இடவசதி விரிவுபடுத்தப்பட்டது.
இந்தப் பள்ளிவாசலில், இஷா தொழுகைக்குப் பிறகு இரவு எட்டரை மணிக்கு மேல் பெண்கள் தொழுவதற்கான தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் பெண்களும் பாதுகாப்பாகவும் சுலபமாகவும் தொழுகையில் கலந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளதாக ஜமாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள கூடுதல் இடத்தை தொழுகைக்காக பயன்படுத்த அனுமதி பெற ஏற்பாடு செய்த எஸ். ஆர். ராஜா MLA அவர்களுக்கும்,
4 மண்டல குழுத் தலைவர்
D. காமராஜ் அவர்களுக்கும் ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து நன்றியினை தெரிவித்தனர்.
இந்த ஏற்பாடு, பெண்கள் குழந்தைகள் தராவி தொழுகையில் கலந்து கொள்ள உதவியாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

24
976 views

Comment