logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தங்கம் விலை குறைவு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ரூ. 480 குஇறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

கடந்த மார்ச் 12-இல் சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ரூ. 1,19,760-க்கும், மார்ச் 13-இல் சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 1,19,200-க்கும், மார்ச் 14-இல் சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ. 1,18,080-க்கும் விற்பனையானது.

இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 17) சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 1,17,200-க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து ரூ. 14,650-க்கும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 4,000 குறைந்து ரூ. 2.76 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0
0 views

Comment