logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

தங்கம் விலை சனிக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,120 அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கம் விலை தொடா்ந்து ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சவரன் ரூ. 1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, செவ்வாய், புதன்கிழமைகளில் முறையே ரூ. 1,20,400, ரூ. 1,20,960 என ஏற்றத்துடன் விற்பனையானது.

கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து 119,760-க்கும், வெள்ளிக்கிழமை ரூ. 119,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, ஒரு சவரனுக்கு ரூ. 1,120 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 118,080-க்கும், ஒரு கிராம் ரூ. 14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ. 10 குறைந்து, ரூ. 280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,80,000 ஆகும்.

0
447 views

Comment