logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்தன! கடைகளிலும், ஆன்லைனிலும் ’அவுட் ஆஃப் ஸ்டாக்’!

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் அனைவரும் மின் அடுப்புகள் பக்கம் திரும்பியுள்ளதால், கடைகளிலும் ஆன்லைன் விற்பனை தளங்களிலும் கையிருப்பில் இருந்த பெரும்பாலான மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்துள்ளன.

மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்கள் தடைப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடந்த மூன்று நாள்களாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர்களும் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படவில்லை, தாமதம் ஏற்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹோட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வீட்டு உபயோகத்துக்கும் மின் அடுப்புகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதனால், ஆன்லைன் விற்பனை தளங்களாக ஃபிளிப் கார்ட், அமேசான் உள்ளிட்டவற்றில் முன்னணி நிறுவனங்களின் மின் அடுப்புகள் பெரும்பாலானவை கையிருப்பில் இல்லை என்று காண்பிக்க தொடங்கிவிட்டன. சில நிறுவனங்களின் மின் அடுப்புகள் ஒற்றை இலக்கு எண்களிலேயே இருப்பு இருப்பதாக காண்பிக்கின்றன.

மேலும், பெரும்பாலான கடைகளிலும் மின் அடுப்புகள் விற்றுத்தீர்ந்ததாகவும், கையிருப்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், சிலிண்டருக்கு மாற்றாக மின் அடுப்புகளை யோசித்த மக்களும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

5
389 views

Comment