logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

கம்பத்தில் மகளிர் தினவிழாவை முன்னிட்டு பெண்களுக்கான மரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி

கம்பம், மார்ச்.08
கம்பம் ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள எம்.கே.எம்.விளையாட்டு கிராமம் மற்றும் கிரீன்வேலி ரோட்டரி கிளப் சார்பில் மகளிர் தினவிழாவை முன்னிட்டு பெண்களை போற்றும் விதமாகவும், பெண்களின் பிரதிநிதித்துவத்தை உணர்த்தும் விதமாக மரத்தான் மற்றும் வாக்கத்தான் (நடைபோட்டி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.கே.எம்.விளையாட்டு கிராமம் நிர்வாக உதவி இயக்குநர் ஜெயபிரியாசெந்தூர் தலைமை வகித்தார். கிரீன்வேலி ரோட்டரி கிளப் சார்பில் மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சந்தனா நாராயணகுமார்,டாக்டர் விஜயலட்சுமி சூர்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக அரசுமருத்துவமனை மருத்துவ அலுவலர் பானுமதி, கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ,தேனி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை அறங்காலர் குழு உறுப்பினர் கே.ஆர்.ஜெயபாண்டியன், எம்.கே.எம்.விளையாட்டு கிராமம் நிர்வாக இயக்குநர் செந்தூர் , கிரீன்வேலி ரோட்டரி கிளப் செயலாளர் சூர்யகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.கே.எம்.விளையாட்டு கிராமத்தில் தொடங்கிய போட்டியானது சாமாண்டிபுரம் சாலை, நகராட்சி உரகிடங்கு, தெற்கு போலீஸ் நிலையம் வழியாக கம்பம் அரசு மருத்துவமனை சென்று மீண்டும் எம்.கே.எம். விளையாட்டு கிராமத்தில் நிறைவடைந்தது. இதில் கல்லூரி மாணவிகள், குடும்பதலைவிகள், தடகள வீரங்கனைகள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

4
587 views

Comment