logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!

ஈரானில் தாக்குதல்கள் தொடரும் அசாதாரண சூழலில், அங்கு நடைபெறும் போர் மற்றும் உள்நாட்டுப் போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்தது. மேலும், ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்த நிலையில், ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
சண்டை தொடங்கியது முதல் இதுவரை, பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ கடந்திருப்பதாகவும், சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனர் என்றும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

0
0 views

Comment