பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக இன்று (மார்ச் 8) தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், சல்மான் துறைமுகத்தில் இலக்குகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.