ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கிரிஸ்டோபர் திலக்...
வருகின்ற ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சியை சேர்ந்த செயல்வீரர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் திரு. கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுகிறார்.
அதற்கான வேட்பு மனுவை மாண்புமிகு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கு. செல்வப் பெருந்தகை MLA முன்னிலையில் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிகழ்வை வரவேற்று முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரும்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் கொள்கை பரப்பு செயலாளருமான Dr. R.S.K.துரை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறையின் மாநில செயலாளருமான நல்லூர் நாயகன் K.S.கணேசன் ஆகிய இருவரும் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் குறிப்பிடுகையில் கிறிஸ்டோபர் திலக் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் முதலமைச்சருடன் 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பணிபுரிந்தவர். தன்னலம் பார்க்காமல் காங்கிரஸ் பேரியக்கத்திற்காக பணிபுரிந்து வருகிறார். இவருடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக தென்காசி மாவட்டத்தின் முன்னாள் இளைஞர் துணைத் தலைவர் இளைய நல்லூர் நாயகன் K.S.G.ராகுல் காந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.