logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

மூன்று நாட்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் நேற்று உயர்வுடன் வர்த்தகமான நிலையில் இன்று(மார்ச் 6) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,658.99 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 517.99 புள்ளிகள் குறைந்து 79,487.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 163.55 புள்ளிகள் குறைந்து 24,602.35 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக இழப்பை சந்தித்தன. எச்சிஎல் டெக், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்ஃபோசிஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.14 சதவீதம், 0.28 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.

துறைரீதியாக, நிஃப்டி ஐடி பங்குகள் முன்னணியில் உள்ளன. இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் 1.57 சதவீதம் உயர்ந்தது .

ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிந்ததால் நிஃப்டி தனியார் வங்கிகள் குறியீடு 1.28 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் குறியீடும் சரிந்தன.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கணிக்கப்பட்டுள்ளது.

0
0 views

Comment