logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

5-ம் நாளாக தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்துள்ளது.

சர்வதேச அளவில் போர்ப் பதற்றம் நிலவி வருவதை அடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும்(மார்ச் 6) தங்கம் விலை குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2ல் சவரனுக்கு ரூ. 920, மாா்ச் 3ல் சவரனுக்கு ரூ. 1,560, மார்ச் 4 -இல் சவரனுக்கு ரூ. 2,120, மார்ச் 5-ல் சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.

இந்த நிலையில், இன்று(மார்ச் 6, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 160 குறைந்து ரூ.14,960-க்கும் சவரனுக்கு ரூ. 1,280 குறைந்து ரூ. 1,19,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ. 290-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

9
308 views

Comment