logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் (பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்) நிலவும் பதற்றம் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிவரையில் திட்டமிடப்பட் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன.

12 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை மறுஆய்வு செய்து, தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுகளை வழங்கப்படும்.

மாணவர்கள், தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

15
621 views

Comment