logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

வேலைவாய்ப்பை அள்ளித் தரும் சுற்றுலாப் படிப்புகள்!

இன்று இந்திய அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மேலும் சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் நன்றாகவே உள்ளன. சுற்றுலாத் துறை இன்று அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. அது மட்டுமன்றி, அதன் பல பிரிவுகள் மேலும் சிறப்புப் பிரிவுகளாக விரிவடைந்துகொண்டே செல்கின்றன.

பாரம்பரியச் சுற்றுலா, ஆன்மிகச் சுற்றுலா, சூழலியல் சுற்றுலா, சாகசச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, விளையாட்டுச் சுற்றுலா, இயற்கைச் சுற்றுலா என வளர்ந்துகொண்டே செல்கிறது. இதில் முதன்மையாக இருப்பது மருத்துவச் சுற்றுலா.
மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக (அறுவைசிகிச்சை உள்பட) வெளிநாடுகளில் இருந்து அதிகமானோர் கடந்த சில ஆண்டுகளாக, தமிழ்நாட்டுக்கு வருகின்றனர். எனவே, உங்கள் மகனை பி.ஏ. டூரிசம் ஸ்டடீஸ், பி.பி.ஏ. டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட், பேச்சிலர் ஆஃப் டிராவல் அண்ட் டூரிசம், பி.ஏ. ஹிஸ்டரி அண்ட் டூரிசம் போன்றவற்றில் ஏதாவது ஒரு படிப்பைப் படிக்க வைக்கலாம்.



0
77 views

Comment