கம்பம் அருகே புதுப்பட்டியில் 5வது குழந்தைகள் வாசிப்பு முகாம்
கம்பம், பிப்.28-
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கம்பம் ஒன்றியக் கிளையின் சார்பில் புதுப்பட்டி கிளை நூலகத்தில் 5வது குழந்தைகள் வாசிப்பு முகாம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஆபிதா பர்வீன் தலைமை தாங்கினார். நூலகர் பிரதீபா வரவேற்றார். மாவட்ட கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் மு.தெய்வேந்திரன் துவக்கி வைத்தார். வாசிப்பு மற்றும் படைப்பு வழிமுறைகள் பற்றி எழுத்தாளர் சக.முத்துக்கண்ணன் பேசினார். குழுக்களாக பிரிந்து நூல்களை வாசித்த குழந்தைகள் தங்கள் அனுபவங்களை, புரிதல்களை பேசினர். அறிவியல் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பினர் சுந்தர் நிறைவுரை ஆற்றினார். பொறுப்பாளர்கள் திலீபன், கவிதா ஆகியோர் நிகழ்வை தொகுத்து வழங்கினர். செயற்குழு உறுப்பினர்கள் ரோஜா, பாலுதாய், சரண்யா மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். பிரியங்கா ஒருங்கிணைப்பு செய்தார். அறிவியல் இயக்கம் கம்பம் கிளை பொருளாளர் லாவண்யா நன்றி கூறினார். நிறைவாக தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.