2026 சட்டமன்றத் தேர்தல்: தேனி மாவட்டத்தின் 3 தொகுதிகளில் திமுக வில் போட்டியிட டாக்டர் எம். வேல்பாண்டியன் விருப்ப மனு தாக்கல்!
சென்னை | பிப்ரவரி 25, 2026
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. "ஸ்டாலின் தொடரட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற வெற்றி முழக்கத்தோடு, கழக நிர்வாகிகள் உற்சாகத்துடன் மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில், கம்பத்தைச் சேர்ந்த மருத்துவர் எம். வேல்பாண்டியன் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி உள்ளிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது மனுக்களைச் சமர்ப்பித்தார்.